' பெற்றோரை இளைஞர்கள் முதியோர் இல்லத்தில் சேர்க்காதீர்கள் ' - நடிகர் ராதாரவி - parithapangal
🎬 Watch Now: Feature Video

யூடியூப் பிரபலங்கள் ஆன சுதாகர் - கோபி தற்போது 'ஹே மணி கம் டூடே கோ டூமரோ யா' என்னும் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தை சாக் இயக்குகிறார். இந்த படத்தை பொதுமக்கள் தயாரிக்கின்றனர். இதற்காக பொது மக்கள் இவர்களுக்கு 6.3 கோடி ரூபாய் வழங்கியுள்ளனர். இந்தப்படத்தின் டைட்டில் அறிமுக விழா சென்னை அடையாறில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது ராதாரவி பேசுகையில்,படத்தில் நாங்கள் செய்தை தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும் செய்கிறார்கள். அழாக இருக்கும் பெண் குடும்பத்தை கெடுக்கிறாள். பெண்களை பற்றி பேசுவதற்கே இப்போது பயமாக உள்ளது. இளைஞர்கள் தயவு செய்து தாய் தந்தையர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடாதீர்கள். தாய் தந்தையர் கடைசிவரை வைத்து காப்பாத்துங்கள் என்றார்.