கரோனா தொற்று: உதவிக்கு முந்தும் சோனு சூட்! - சோனு சூட்
🎬 Watch Now: Feature Video
கரோனாவுடன் போராடி வரும் மக்களுக்கு நடிகர் சோனு சூட் தொடர்ந்து பல உதவிகளை செய்த வண்ணம் உள்ளார். இந்நிலையில், மும்பையில் அவரது இல்லத்திற்கு வெளியே நேற்று (மே.14) மக்களை சந்தித்து ரமலான் வாழ்த்து கூறினார்.
நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து தான் ஆக்சிஜன் இறக்குமதி செய்யவிருப்பதாக நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார். இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆலைகளாக நிறுவவும் சோனு சூட் திட்டமிட்டுள்ளார்.