விஷால் அவர் வாயாலயே கெட்டார் - நடிகர் ராதாரவி - ராதாரவி
🎬 Watch Now: Feature Video
'செளத் இண்டியன் சினி டெலிவிஷன் ஆர்டிஸ்ட் & டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன்' சங்க தேர்தல் வருகின்ற பிப்ரவரி 15ஆம் தேதி சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. அதை தொடர்ந்து ஜனவரி 29,30,31ஆம் தேதிகளில் வேட்புமனு தாக்கல் நடைப்பெறவுள்ள நிலையில் இன்று அதற்கான விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது . இந்நிலையில், நடிகர் ராதாரவி நடிகர் பத்திரிகையாளரை சந்தித்து பேசினார் அப்போது, நடிகர் சங்கத்தின் காலம் முடிந்த பிறகும் 6 மாத காலம் நீட்டித்தது முதல் குற்றம். என்னை உறுப்பினராக சேர்த்துக்கொள்ளலாம் என்று நீதிமன்றமே கூறிய நிலையில், அடிப்படை உறுப்பினரிலிருந்தும், இ-பதிவேட்டிலிருந்தும் நீக்கியது இரண்டாவது குற்றம். ஒழுங்காக பார்ம் 6 படிவம் வந்து சேரவில்லை. அதற்கு முன் நடிகர் சங்க தேர்தலை நடத்திவிட்டார்கள்.1000 தபால் ஓட்டுகள் பெற்றுவிட்டோம் என்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் முன்பே விஷால் அவர் வாயாலே மாட்டிக்கொண்டார். அதனால்தான் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இவை அனைத்தும்தான் தேர்தல் மறுபடியும் நடக்க காரணமாக இருக்கிறது என்றார்.