என் வெற்றிக்கு காரணம் எனது தந்தை - கண்ணீருடன் நினைவு கூறிய தயாரிப்பாளர் சிவி குமார் - producer cv kumar press meet
🎬 Watch Now: Feature Video

திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சிவி வி குமார் தயாரிக்கும் படம் 'டைட்டானிக் காதலும் கவுந்து போகும்'. இதன் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் சிவி குமார் பேசுகையில், திரைப்பட உலகில் பல வெற்றிகளையும் பல தோல்விகளையும் நான் சந்தித்துள்ளேன். ஆனாலும் விடாமுயற்சியால் இன்றும் திரைத்துறையில் உள்ளேன். இந்த முன்னேற்றத்திற்கு எனது தந்தை தான் காரணம். அவர் காட்டிய வழியில் சென்றதால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றவனாக உள்ளேன் என்று டைட்டானிக் காதலும் கவுந்து போகும் இசை வெளியீட்டு விழாவில் கண்ணீருடன் கூறினார்.