அரசியல் களத்தில் அனலைக் கூட்டிய 'தல' - 'தளபதி' - தமிழ்நாடு செய்திகள்
🎬 Watch Now: Feature Video

வாக்களிக்க 'தல' அஜித் கறுப்பு - சிவப்பு நிறத்தில் அணிந்துவந்த முகக்கவசம், 'தளபதி' விஜய் கறுப்பு - சிவப்பு நிற சைக்கிளில் வாக்களிக்க வந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகின. இவர்கள் தங்களுக்குத்தான் ஆதரவு தருகிறார்கள் என உடன்பிறப்புகள் புளகாங்கிதம் அடைகின்றனர். யாரேனும் உச்ச நட்சத்திரங்கள் இயல்பாக வந்தாலும் ஆடையிலோ அவர்கள் வைத்திருக்கும் பொருளிலோ குறியீடுகள் ஏதேனும் தென்பட்டால் அவர் தங்களுக்குத்தான் சாதகம் என்ற மனோபாவம் அதிகரித்துவிட்டது என்றேதான் கூற வேண்டும்.