அன்னமங்கலம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு! - அன்னமங்கலம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14915449-thumbnail-3x2-fff.jpg)
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று(ஏப்.2)) நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியினை பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகரன் தொடங்கிவைத்தார். இதில் பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை , திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. 300க்கும் மேற்பட்ட ஐல்லிக்கட்டு வீரர்கள் துள்ளிக் குதித்து, திமிறி எழுந்த ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கினர். போட்டியில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST