3 மில்லி இரத்தத்தால் விஜயகாந்த் படத்தை வரைந்து அஞ்சலி செலுத்திய இளைஞர்! - young man paid tribute
🎬 Watch Now: Feature Video
Published : Dec 29, 2023, 9:22 PM IST
மயிலாடுதுறை: பிரபல நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் நேற்று (டிச.29) முதல் தொடர்ந்து சென்னையில் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பல்வேறு மாவட்டங்களில் விஜயகாந்தின் உருவப் படத்தை வைத்து மாலை அணிவித்து, மலர் தூவி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுகா பகுதியில் தொண்டர்கள், மறைந்த விஜயகாந்திற்கு பேனர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அந்த வகையில், இன்று (டிச.29) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் ஒருநாள் கடை அடைப்பு செய்து, விஜயகாந்த் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் பகுதியைச் சேர்ந்த நுண்கலை நிபுணரும், இளம் ஓவிய ஆசிரியருமான அரவிந்தன், அவருடைய 3 மில்லி இரத்தத்தினை எடுத்து, அந்த இரத்தத்தால் விஜயகாந்தின் படத்தை வரைந்துள்ளார். தொடர்ந்து, மூன்று மணி நேரம் ரத்தத்தாலான ஓவியத்தை வரைந்து, கண்ணீர் அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.