சற்று முன் வயிற்றில் உதைத்த இளைஞருடன் கொஞ்சி பேசிய கர்ப்பிணி.. ஷாக்கிங் வீடியோ! - Mayiladuthurai news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18252750-thumbnail-16x9-mayiladuthurai.jpg)
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை டவுன் எக்ஸ்டென்ஷனில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் 5 மாத கர்ப்பிணி ஒருவர் மருத்துவ பரிசோதனைக்காக வந்துள்ளார். மாடிப்படியில் அமர்ந்திருந்த அப்பெண்ணுக்கும், இளைஞர் ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில், அந்த இளைஞர் கர்ப்பிணியின் வயிற்றில் மிதித்துள்ளார். இதனையடுத்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்துள்ளனர். எனவே உடனடியாக இளைஞர், அந்த இடத்தை விட்டுச் சென்றுள்ளார். பின்னர், அங்கு இருந்தவர்கள் அப்பெண்ணை மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட கர்ப்பிணியும், அந்த இளைஞரும் மருத்துவமனை வளாகத்தில் மிகவும் நெருக்கமாக பேசிக்கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இதனைப் பார்த்த மருத்துவமனை தனியார் பாதுகாப்பு ஊழியர்கள், இருவரையும் கண்டித்துள்ளனர். அதற்கு, “உங்கள் வேலையைப் பாருங்கள்” என கர்ப்பிணி கூறியுள்ளார். இந்த நிலையில் இது தொடர்பான வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணின் பெயர் சுபா என்றும், இளைஞரின் பெயர் விஜய் என்பதும், சீர்காழி தென்பாதியைச் சேர்ந்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் எனவும் மருத்துவமனை பாதுகாப்பு ஊழியர்கள் தெரிவித்தனர்.