குப்பையை இப்படியா வீசுவது? என்ற கோவை மாநகராட்சி ஊழியர் - வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்! - kovai
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் அதிகாலை முதல் நாள்தோறும் குப்பையை சேகரிக்க மாநகராட்சி ஊழியர்கள் ஒவ்வொரு வீதிகள் வழியாகச் சென்று குப்பைகளை சேகரித்துச் செல்கின்றனர். இந்நிலையில் ஒரு சிலர் குப்பையை வாகனத்திலோ, குப்பைத் தொட்டியிலோ கொட்டாமல் வேலை மற்றும் பணிகளுக்குச் செல்லும் பொழுது சாலைகளில் வீசிச் செல்கின்றனர். இதனால் அப்பகுதிகளில் எல்லாம் துர்நாற்றம் வீசி வருகிறது.
மாநகராட்சி சார்பில் குப்பைகளை சாலையில் கொட்டக் கூடாது எனப் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும் அதனை கண்டு கொள்ளாத இது போன்ற ஒரு சிலரால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் கோவை சாய்பாபா காலனி கே.கே.புதூர் பகுதியில் சாலையில் குப்பையை வீசிச் சென்ற பெண்ணை, அப்பகுதியிலிருந்த சிலர் கேள்வி எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் ஆத்திரத்தில் அவரது வாகனத்தை எடுக்கும்போது, வாகனம் கீழே விழுந்தது. கீழே சாய்ந்த வாகனத்தையும் எடுத்துக்கொண்டு மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை அப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் செல்போனில் வீடியோ எடுத்த நிலையில், அப்பெண்ணும் பதிலுக்கு அவரது செல்போனில் வீடியோ எடுக்கத் துவங்கினார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.