ரூ.1 லட்சம் வண்டியால் ஓயாத தொல்லை - நீதிமன்றத்தை நாடிய பெண்! - court
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி: நாகர்கோவில் இடலாக்குடியை சேர்ந்தவர் இஸ்லாமிய பெண்மணி மீராருஸ்வார். இவர், கணவருடன் சேர்ந்து சிறிய அளவில் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வருகிறார். மீராருஸ்வாருக்கு மூட்டு வலி இருப்பதன் காரணமாக வெளியே சென்று வருவது கடினமாக இருந்துள்ளது. எனவே, இவர் கடையின் தொழில் தேவைக்காகவும், உடல் பிரச்சணை காரணமாகவும் செல்ப் ஸ்ட்டார்ட் (self-start) இரு சக்கர வாகனம் வாங்க முடிவு செய்துள்ளனர்.
இதற்காக,நாகர்கோவிலில் தனியார் இரு சக்கர வாகன விற்பனை நிறுவனத்திற்கு சென்று, ரொக்கமாக ஒரு லட்சத்து ஐயாயிரம் ரூபாய் கொடுத்து வாகனத்தை வாங்கி வந்துள்ளார். இருசக்கர வாகனத்தை வாங்கிய மூன்றாவது நாளிலிருந்து வண்டி சரியாக வேலை செய்யாமல் பழுதானதாக கூறப்படுகிறது.
முதல் முறை பழுது ஏற்பட்டதால், நிறுவனத்திடம் கூறி பழுது நீக்கம் செய்து உள்ளார். அதன் பின் மீண்டும் வண்டி பழுதாகி உள்ளது. இப்படியாக, தொடர்ந்து மூன்று, நான்கு முறை வண்டி பழுதான நிலையில் வாகனத்தை மாற்றி தரும் படி மீராருஸ்வார் சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் கேட்டு இருக்கிறார்.
வாகனத்தை மாற்றி தருவதாக கூறி வாகனத்தை பெற்று கொண்ட நிறுவனம், புதிய வாகனம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கோபம் அடைந்த மீராருஸ்வார் சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் இது குறித்து பேசியுள்ளார். பழுதான தனது புதிய வாகனத்திற்கு பதிலாக மாற்று வாகனம் தர வேண்டும், இல்லை என்றால் வாகனத்திற்கான பணத்தை திருப்பி தருமாறு கூறியுள்ளார்.
ஆனால், அந்த நிறுவனம் எந்த கோரிக்கைக்கும் உடன்படவில்லை என சொல்லப்படுகிறது. இதனால், மீராருஸ்வார் அந்த நிறுவனத்தின் மீது காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து, நாகர்கோவில் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார். இந்நிலையில், இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்துவதை விட்டு விட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனம் தங்களை மிரட்டி வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டையும் பாதிக்கப்பட்ட பெண்மணி முன் வைத்துள்ளார்.
இதையும் படிங்க:புறம்போக்கு நிலத்தில் பள்ளி வேண்டும் - செல்போன் டவரில் ஏறி விவசாயி தர்ணா!