VIRAL VIDEO: "போலாம் ரைட்"...! பேருந்திற்கு வழிவிட்டு விலகி நின்ற காட்டுயானை... - முதுமலைக்காடுகள்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: ஆனைகட்டி, மாங்கரை, தடாகம் பகுதியில் அதிக அளவிலான காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. தற்போது கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில், காட்டு யானைகள் தண்ணீர் தேடி அடிக்கடி வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி ஊருக்குள் நுழைகின்றன.
மேலும் கோடைக்காலம் காரணமாக வனவிலங்குகள் எந்நேரத்திலும் வனம் மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து வெளியேறலாம். ஆகையால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்து வருகின்றனர். பல சமயங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்களை காட்டு யானைகள் வழிமறித்துள்ளன.
இந்நிலையில் இன்று காலை ஆனைகட்டி மலைச்சாலை தூமனூர் பிரிவு அருகே ஒற்றைக்காட்டு யானை ஒன்று மலைப்பகுதியில் இருந்து வெளியேறி உள்ளது. அச்சமயத்தில் பேருந்து ஒன்று அந்த வழியாக வந்ததை கண்ட காட்டுயானை பேருந்துக்கு வழிவிட்டு ஒதுங்கியுள்ளது. இதனை பேருந்தில் இருந்த பயணிகள் அவர்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.