காவிரியில் விநாடிக்கு 9,500 கனஅடி நீர்வரத்து.. ஒகேனக்கலில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்! - ஒகேனக்கல் காவிரி ஆற்றில்
🎬 Watch Now: Feature Video
Published : Oct 11, 2023, 4:49 PM IST
தருமபுரி: குறுவை, தாளடி, சம்பா சாகுபடி உள்ளிட்டவைகளுக்காக காவிரி நீரை திறந்து விடக்கோரி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள், பல அரசியல் கட்சிகள் என பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து தஞ்சை மாவட்டத்தில் முழு கடை அடைப்பு மற்றும் சாலைமறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு தராமல் அடம்பிடிக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு இதற்காக கோரிக்கை வைத்தும் பல கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, பல ஆயிரக்கணக்கான போலீசார் டெல்டா மாவட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை, கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியை வந்தடைந்தது. இன்று காலை 2000 கனஅடியில் இருந்து 6000 கனஅடியாக அதிகரித்தது.
காலை 10 மணி நிலவரப்படி, நீர்வரத்து மேலும் உயர்ந்து விநாடிக்கு 9,500 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஒகேனக்கல் மெயின் அருவி, சினிஅருவி, மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் காவிரி நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல் வழியாக செல்லும் காவிரி தண்ணீர் இன்று இரவு மேட்டூர் அணையை சென்று அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.