வீடியோ: வேஷ்டியில் விராட் கோலி சாமி தரிசனம் - உஜ்ஜைன் மஹாகாளேஸ்வரர்
🎬 Watch Now: Feature Video
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா இருவரும் இன்று (மார்ச் 4) மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பாபா மகாகாலேஸ்வரர் கோயிலுக்கு வந்தனர். அங்கு அதிகாலை 4 மணி முதல் 5.30 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் நடைபெற்ற சிறப்பு ‘பாஷ்ம ஆர்த்தி’ பூஜையில் கலந்து கொண்டு, தொடர்ந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்த தரிசனத்தின்போது விராட் கோலி வேஷ்டியிலும், அனுஷ்கா ஷர்மா புடவை அணிந்தும் வந்திருந்தனர். சாமி தரிசனம் முடித்த பின்பு, கோயில் வளாகத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தனர். முன்னதாக சமீபத்தில் விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதி, உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தில் உள்ள ரிஷிகேஷில் சுவாமி தரிசனம் செய்தனர். அங்குள்ள சுவாமி தயானந்த் கிரி ஆசிரமத்திற்கும் சென்றனர். இங்கு எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.
விராட் கோலி, இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். அதேநேரம் நடிகை அனுஷ்கா ஷர்மா ‘சக்தா எக்ஸ்பிரஸ்’ (Chakda Express) என்ற பயோபிக் படத்தில் ஜூலன் கோஸ்வாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனை அனுஷ்கா ஷர்மாவின் சகோதரரான கார்னேஷ் ஷர்மாவின் கிளீன் ஸ்லேட் பிலிம்ஸ் (Clean Slate Filmz) நிறுவனம் தயாரித்து வருகிறது.