ஓடும் பேருந்தில் தொங்கியபடி பயணம்! சாகசமா? பேருந்து பற்றாக்குறையா? பதறவைக்கும் வீடியோ! - திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில்
🎬 Watch Now: Feature Video
Published : Oct 7, 2023, 5:04 PM IST
|Updated : Oct 7, 2023, 5:34 PM IST
விழுப்புரம்: மேல்மருவத்தூரில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் ஆபத்தை உணராமல் தொங்கியபடி இளைஞர்கள், மாணவர்கள் பயணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அலுவலக நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலக பணியில் இருக்கக் கூடியவர்கள் என அனைவரும், ஒரே சமயத்தில் போக்குவரத்து சேவையை பயன்படுத்துவதும், அதனால் ஏற்படும் கூட்ட நெரிசல் என்பதும் மக்கள் அனுதினமும் சந்திக்கும் ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது.
அந்த கூட்ட நெரிசலில், இளைஞர்கள் ஆபத்தான முறையில் படியில் பயணம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது காண முடிகின்றது. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மேல்மருவத்தூரில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற தனியார் பேருந்தில், மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணித்தது வீடியோவாக பதிவாகி உள்ளது.
அதில் பேருந்தின் படிக்கட்டுகளிலும், பேருந்தின் பின்புறம் இருக்கும் ஏணிப் படிக்கட்டுகளிலும் மாணவர்கள் தொங்கிக் கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதைப் போன்ற சம்பவம் பல்வேறு பகுதிகளில் நடைபெறுவது காண முடிகிறது.
சில சமயங்களில் இது போன்ற ஆபத்தான பயணத்தால் உயிர் சேதங்களும் நிகழ்கின்றன. அவற்றை தவிர்க்கும் வகையில் கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும் என்றும், ஆபத்தான பயணம் மேற்கொள்பவர்களை காவல்துறையின் முறையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.