விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு முதலுதவி அளித்த முன்னாள் அமைச்சர்..! சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டு..!
🎬 Watch Now: Feature Video
சென்னை: பட்டினப்பாக்கம் அடுத்த காமராஜர் சாலையில் இன்று (அக்.11) காலை 9.50 மணியளவில், 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் விபத்தில் சிக்கி, காலில் முறிவு ஏற்பட்டு தவித்துள்ளார்.
அப்போது அவ்வழியாக தலைமைச் செயலகம் நோக்கி, தனது காரில் சென்று கொண்டிருந்த முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும், விராலிமலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர், விபத்தில் சிக்கிய பெண்ணை கண்டதும், உடனடியாக தனது காரில் இருந்து இறங்கி வந்து முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.
பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, காலில் முறிவு ஏற்பட்ட பெண்ணுக்கு அங்கேயே அடிப்படை சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். சாலை விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.
விபத்தில் காயம் அடைந்த பெண்ணிற்கு முன்னாள் அமைச்சர் முதலுதவி அளித்து, மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.