தருமபுரியில் 12வது நாள் காரியத்தில் படையல் உண்ண வந்த பச்சைக்கிளி - வைரலாகும் வீடியோ - latest news in tamil
🎬 Watch Now: Feature Video
Published : Aug 27, 2023, 7:37 PM IST
|Updated : Aug 27, 2023, 7:52 PM IST
தருமபுரி: பாலக்கோடு அருகே இறந்த பெண்ணின் 12வது நாள் காரியத்தில் படையல் உணவை உண்ண வந்த பச்சைகிளியால் உறவினர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.
பாலக்கோடு அருகே தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி விஜயன் என்பவரின் மனைவி ஜெயலட்சுமி(55). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 14-ஆம் தேதி உயிரிழந்துவிட்டார். ஜெயலட்சுமிக்கு ஈமச்சடங்கு செய்யும் விதமாக உறவினர்கள் 12-ஆவது நாள் காரியம் அவருடைய வீட்டில் இறந்தவரின் புகைப்படத்தை வைத்து மாலை அணிவித்து பூஜை செய்து படையல் வைத்துள்ளனர்.
இறந்தவர் விரும்பி உண்ணும் இனிப்பு கார வகைகள், பழங்கள், அசைவ உணவு உள்ளிட்டவை படையலில் வைத்து பூஜை செய்துள்ளார்.அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பச்சைக்கிளி ஒன்று பறந்து வந்து படையில் உள்ள உணவை சாப்பிட்டது.
பின்னர், ஜெயலட்சுமியின் கணவரிடம் சென்று அந்த பச்சைக்கிளி அமர்ந்துள்ளது. இதனைக் கண்ட உறவினர்கள் ஜெயலட்சுமியே நேரில் வந்ததை போல் உணர்வதாக கூறி நெகிழ்ச்சி அடைந்தனர். மேலும், இந்த சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்ட நிலையில் அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.