thumbnail

By

Published : Apr 26, 2023, 6:19 PM IST

ETV Bharat / Videos

பழனி அருகே சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு 300 ஆட்டுக்கிடா வெட்டி கிராம மக்கள் சாமி தரிசனம்!

திண்டுக்கல்: பழனி அருகே கணக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள கோம்பை பட்டி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பெரிய துரை கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டும், மாதம் மும்மாரி மழை பெய்ய வேண்டியும் கிராம மக்கள் கிடாய் வெட்டி சாமி தரிசனம் செய்வது வழக்கம். 

கடந்த மூன்று ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக இவ்விழா சரிவர நடக்கவில்லை.  இந்நிலையில் இந்த ஆண்டு, இக்கோயிலில் 300 ஆட்டுக்கிடாய் வெட்டி கிராம மக்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோம்பைப்பட்டி, கணக்கன்பட்டி, சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, ராம்பட்டினம் புதூர், ஆயக்குடி உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து அன்னதானம் வழங்கப்படும். 

இதன்மூலம் தங்களது நேர்த்திக்கடன் நிறைவேறுவதாக கிராம மக்கள் நம்புகின்றனர். தொடர்ந்து 42 ஆண்டுகளாக இவ்விழா கிராமத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மக்கள் பிரதிநிதிகள் யாரும் வராததால் ஈயாடிய அரசு விழா; தனி ஒருவனாக பங்கேற்ற அர்ச்சகர்!

இதையும் படிங்க: 12 மணி நேர வேலை மசோதா: சீரமைத்து அமல்படுத்த முதலமைச்சரிடம் வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.