இடுகாட்டுக்கு சாலை வசதியில்லை! இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை சுமந்து செல்லும் அவலம்! - ஆற்றை கடக்க முடியமல் அவதி

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 16, 2023, 7:15 AM IST

திண்டுக்கல்: முள்ளிப்பாடி கிராமம், செட்டியபட்டியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் எவரேனும் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டால் அருகிலுள்ள சந்தனவர்த்தினி ஆற்றுப்படுகை ஓரமாக இருக்க கூடிய இடுகாட்டில் அவர்களை அடக்கம் செய்வது வழக்கம்.

இடுகாட்டிற்கு ஆற்று வழியாக செல்லக்கூடிய பாதை முழுவதும் முட்கள் நிறைந்தும், மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பியும் இருப்பதால் கிராம மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இடுகாட்டிற்கு செல்வதற்கு பாதை அமைப்பது தொடர்பாக பலமுறை திமுக ஊராட்சி மன்ற தலைவர் மாதவி காமராஜ் இடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

தற்போது கணேசன், சுந்தரம் என்பவரின் தாயார் அழகம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். இந்நிலையில் அழகம்மாளை அடக்கம் செய்ய சடலத்தை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல பாதை இல்லாத நிலையில், சந்தனவர்தினி ஆற்று படுகை ஓரமாக உள்ள குளத்து கரையில் தேங்கி நிற்கும் இடுப்பளவு தண்ணீரில் மகன்கள் மற்றும் உறவினர்கள் சுமந்து சென்று அடக்கம் செய்த அவல நிலை ஏற்பட்டது.

இறந்தவர்கள் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய இடுகாட்டிற்கு தாங்கள் சென்று வர சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படுமா என அப்பகுதி மக்கள் காத்து இருக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.