விஜய் திவாஸ் தினம்.. புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாட்டம்! - போர் வீரர்கள் நினைவு சின்னம்
🎬 Watch Now: Feature Video
Published : Dec 16, 2023, 12:32 PM IST
புதுச்சேரி: 1971ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் 16ஆம் தேதி "விஜய் திவாஸ்" என்ற பெயரில் வெற்றி நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த போர் வங்கதேச நாடு உருவாகக் காரணமாக இருந்தது. இந்த போருக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தான் பகுதி, வங்கதேசம் என்ற நாடாக மாறியது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியா போரில் வெற்றி பெற்ற நாளான விஜய் திவாஸ் தினத்தில், போரில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும்.
அந்த வகையில் புதுச்சேரி கடற்கரை சாலை, பிரெஞ்சு தூதரகம் எதிரில் உள்ள போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, போர் வெற்றி தின விழாவைக் கொண்டாடினர்.