பசியோடு பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்த தர்மபுரி எம்எல்ஏ! - தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன்
🎬 Watch Now: Feature Video
தர்மபுரி: பசியோடு பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் உணவு வாங்கி கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட தடங்கம் ஊராட்சி அவ்வை நகர் அரசு பள்ளியில், சட்டமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியிலிருந்து டேபிள் பெஞ்ச் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மாணவர்கள் கல்வி பயிலும் வகுப்பறைக்கு சென்றார். அங்கு மாணவர்கள் அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். பதிலுக்கு இவரும் வணக்கம் தெரிவித்து விட்டு அனைவரும் சாப்டீங்களா என்று கேட்டார்.
அதில் பல மாணவர்கள் சாப்பிட்டு விட்டோம் என்றார் ஐந்து மாணவர்கள் மட்டும் இல்லை என்று தனியாக தெரிவித்தனர். உடனடியாக மதிய சாப்பாடு இல்லை காலை உணவு என்று சட்டமன்ற உறுப்பினர் கேட்க, பள்ளிக்கு நேரம் ஆனதால் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வந்ததாக தெரிவித்து உள்ளனர்.
உடனடியாக தனது உதவியாளரிடம் சொல்லி அருகில் இருந்த உணவகத்தில் இருந்து உணவு வாங்கி வந்த சட்டமன்ற உறுப்பினர், பள்ளிக்கு வழங்கிய டேபிள் பெஞ்சில் உட்கார வைத்து மாணவர்களுக்கு உணவு பரிமாறினார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.