மாதா சிலை உடைப்பு: சமூக விரோதிகளின் அக்கிரமத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்! - மாதா சிலை
🎬 Watch Now: Feature Video
ஓட்டப்பிடாரம்: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே அன்னை வேளாங்கண்ணி மாதா கெபியில் உள்ள சொரூபம் உடைக்கப்பட்டதை அடுத்து குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓட்டப்பிடாரம் அடுத்த கொம்பாடி, தளவாய்புரம் கிராமத்தில் இருந்து மணியாச்சி செல்லும் சாலை அருகே அன்னை வேளாங்கண்ணி மாதா கெபி உள்ளது. இந்த கெபியில் அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் வழிபாடு மேற்கொண்டு வரும் நிலையில் மர்ம நபர்கள் அந்த கெபியை உடைத்து மாதா சொரூபத்தையும் சேதமாக்கியுள்ளனர்.
இந்நிலையில் அதைப் பார்த்த அப்பகுதி மக்கள் சமூக விரோதிகள் யாரோ இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும், கடந்த ஆண்டும் இதேபோல் ஒரு சம்பவம் நடைபெற்றதாகவும் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். மாதா சொரூபம் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மர்மமான முறையில் ஆண் புலி உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணை!