பட்டப்பகலில் கொள்ளை.. ஆளில்லா நேரத்தில் அரங்கேறிய நகை திருட்டு! பலே திருடனை காட்டிக் கொடுத்த சிசிடிவி! - tirupattur news in tamil tamil
🎬 Watch Now: Feature Video
Published : Sep 7, 2023, 12:22 PM IST
திருப்பத்தூர்: வாணியம்பாடியில் மருத்துமனையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திலிருந்து செல்போன் மற்றும் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்ற நபரை, சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி அடுத்த திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா. இவர் வாணியம்பாடி, சி.எல். சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். பின்னர் வாகனத்தை மருத்துவமனையின் முன்பு நிறுத்திவிட்டு மருத்துவமனையில் உள்ளே சென்று வருவதற்குள், இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த செல்போன் மற்றும் தங்க நகை காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பிரியங்கா வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் இருசக்கர வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது வாகனத்தின் அருகேர் நீண்ட நேரம் ஒருவர் நின்று நோட்டமிட்டதும், பின்னர் அவர் இருசக்கர வாகனத்தில் வைத்து இருந்த செல்போன் மற்றும் தங்க நகையை கொள்ளையடித்துச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
பின்னர் சிசிடிவி காட்சிகளை கொண்டு வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டதில் மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து சங்கரை பிடித்த காவல்துறையினர் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் தங்க நகையை மீட்டு பிரியங்காவிடம் ஒப்படைத்தனர். மேலும் சங்கர் மீது வழக்குபதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.