அண்ணாமலையார் கோயில் வைகாசி மாத பிரதோஷம் - பிரதோஷம்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 2, 2023, 9:10 AM IST

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இங்கு உள்ள ஆயிரங்கால் மண்டபம் அருகே பெரிய நந்திக்கு வைகாசி மாத பிரதோஷம் நேற்று (ஜூன் 1) மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

பௌர்ணமி மற்றும் அமாவாசை வரும் இரண்டு தினங்களுக்கு முன்பு மகா நந்திக்கு பிரதோஷம் நடைபெறுவது வழக்கம். வைகாசி மாத பிரதோஷ தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேகத் தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப் பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய வண்ண வண்ண மலர்களால் ஆன மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது. பிரதோஷ தினத்தின்போது நந்திவர்மனை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. 

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும் என்பதும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் ஐதீகம். நேற்று நடைபெற்ற வைகாசி மாத பிரதோஷத்தினை ஏராளமான பக்தர்கள் நேரில் கண்டு அண்ணாமலையாருக்கு ‘அரோகரா’ கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.