மாமன்னன் திரைப்படத்திற்கு கோவையில் உயதநிதி ரசிகர் மன்றத்தினர் உற்சாக ஆதரவு - உதயநிதி ரசிகர் மன்றம்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன்னன் இன்று (ஜூன் 29) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
மாமன்னன் பட டிரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து படத்திற்குப் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இத்திரைப்படத்திற்கு எதிர்ப்புகள் வலுத்தன. இந்த நிலையில் கோவையில் பல்வேறு திரையரங்குகளில் இப்படம் வெளியாகி உள்ளது.
கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள சாந்தி திரையரங்கில் மேளதாளம் முழங்க ரசிகர்கள் காலை முதலே உற்சாகமாக கூடி வந்தனர். படத்தைக் கொண்டாடும் வகையில், கோவை மாநகர மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற விழாவில் திரையரங்கத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் மாவட்டச் செயலாளர் உதயநிதி பாபு, மாநகரத் தலைவர் டேவிட் ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்டத் தலைவர் உதயபூபதி, மாநகர செயலாளர் முனிப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், தி.மு.க.வடக்கு மாவட்ட செயலாளர் தொ.ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.