வீடியோ: திருப்பத்தூரில் இருசக்கர வாகனம் திருட்டு: போலீசார் விசாரணை - CCTV
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மகாலிங்கம் (62) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் வெளியே நேற்று இரவு நிறுத்தி வைத்துள்ளார். காலையில் இருசக்கர வாகனம் கானாமல் போனது தெரிய வரவே, உடனே சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளார். அதில் அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இதுகுறித்து அவர் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்பூர் பகுதியில் கடந்த சில நாள்களாக இருசக்கர வாகனம் அதிக அளவில் திருடுபோகும் சம்பவம் அரங்கேறிவருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST