Coimbatore: பெண் காவலரை தாக்கியதாக சமூக ஆர்வலர் நந்தினி உட்பட இருவர் கைது! - கோயம்புத்தூர்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர் : ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஆண்டுதோறும் தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பகுதிகளில் இந்தக் கூட்டமானது நடத்தப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆர்.எஸ்.எஸ். தேசிய நிர்வாகிகள் மற்றும் மாநில அமைப்பாளர்கள் பங்கேற்கும் கூட்டம் ஊட்டியில் அவ்வமைப்பின் தலைவர் மோகன் பகவத் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உதகையில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் நந்தினி, நிரஞ்சனா ஆகிய இரு பெண்கள், உதகையில் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர்.
அதற்காக நேற்று மதுரையிலிருந்து பேருந்து மூலம் கோவை நோக்கி வந்த அவர்களை மாவட்ட எல்லையில் சூலூர் போலீசார் தடுத்து நிறுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய முற்பட்டனர். அப்போது அப்பெண்கள் ஆனந்தி என்ற பெண் காவலரை, கன்னத்தில் அறைந்து தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு இருவரையும் சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பெண் காவலர் அளித்தப் புகாரின் பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் இருவரையும் கைது செய்த போலீசார், சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க :சென்னையில் விசாரணை முடித்து வீடு திரும்பியவர் உயிரிழப்பு - போலீஸ் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு