viral video: நடுரோட்டில் ஆக்ரோஷமாக மோதிய யானைகள்.. வைரல் வீடியோ - Viral video
🎬 Watch Now: Feature Video
கேரளா மாநிலத்தில் சாலை நடுவே இரு காட்டு யானைகள் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு மறையூர் - காந்தலூர் செல்லும் சாலையில் இன்று (ஜூன் 28) அதிகாலையில் இரண்டு காட்டு யானைகள் சாலையின் நடுவே சண்டையிட்டுக் கொண்டிருந்தது.
அப்போது, இரண்டு காட்டு யானைகளும் சாலையின் நடுவே ஒன்றோடு ஒன்று முட்டி மோதி சண்டையிட்டது. நீண்ட நேரமாக சாலையின் நடுவே நின்று சண்டையிட்ட இரண்டு காட்டு யானைகளும், பின்னர் விலகி நின்று ஒன்றோடு ஒன்று பார்த்தபடியே வெகு நேரமாக சாலையிலே நின்றது. இதனையடுத்து சில மணி நேரம் கழித்து யானைகள் காட்டுப் பகுதிக்குள் சென்றன.
இதனிடையே, மறையூர் காந்தளூர் சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும், வனப்பகுதிக்குள் இருக்கும் யானைகள் சாலையின் நடுவே மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் வருவது இந்தப் பகுதியில் தொடர் கதையாகி வருகிறது. தற்போது இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.