Kumbakkarai Falls: கும்பக்கரை அருவியில் நீர் வரத்து குறைவு.. காத்திருந்து குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்! - Kumbakkarai Falls in theni
🎬 Watch Now: Feature Video
Published : Aug 27, 2023, 6:16 PM IST
தேனி: சுட்டெரிக்கும் வெப்பத்தின் தாக்கத்தைத் தணிக்க இன்று (ஆகஸ்ட்27) கும்பக்கரை அருவியில் கொட்டும் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். கடந்த சில தினங்களாக நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் அருவியில் மிகவும் குறைந்த அளவில் நீர் வருவதால் சுற்றுலாப் பயணிகள் காத்திருந்து குளித்துச் செல்கின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி (Kumbakkarai Falls) மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முற்றிலும் மழை பெய்யாததினாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாலும் வார விடுமுறை தினங்களில் நீர் நிலைகளைச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் நாடி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், கும்பக்கரை அருவிக்குத் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து காலை முதல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
மேலும், நடப்பு ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் அருவியில் நீர் வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. வெப்பத்தின் தாக்கத்தைத் தணிக்க அருவியில் கொட்டும் நீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்து வெப்பத்தின் தாக்கத்தைத் தணித்து மகிழ்கின்றனர்.