தக்காளி விலை உயர்வு.. தக்காளி சாஸில் ரசம் வைத்து நூதன போராட்டம்! - Tomato price hike
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டு வரவும், அரசு நேரடியாக தக்காளியை கொள்முதல் செய்து நியாய விலை கடைகளின் மூலம் வழங்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, தக்காளி சாஸ் மூலம் ரசம் தயாரித்து நூதன முறையில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து, அங்கு தாயரிக்கப்பட்ட ரசத்தை போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் கொடுத்தனர். தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ள சூழ்நிலையில் தக்காளிக்கு பதிலாக ஒரு ரூபாய் மதிப்புள்ள தக்காளி சாஸ் பாக்கெட்டை வாங்கி தக்காளி ரசம் வைத்து விடலாம் எனவும், தக்காளி உயர்வை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நேரடியாக கொள்முதல் செய்து நியாய விலை கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு தக்காளியை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், தோட்டக்கலை துறை மற்றும் வேளாண் துறை ஒன்றாக இணைக்க கூடாது என வலியுறுத்தியும் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க :234 தொகுதி நிர்வாகிகளை நாளை சந்திக்கிறார் விஜய்.. புதிய திட்டம் என்ன?