திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள வருண லிங்கம் மகா கும்பாபிஷேகம் கொண்டாட்டம்!
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோயிலின் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அஷ்ட லிங்கங்களில், வருண லிங்கத்திற்கு மகா கும்பாபிஷேக விழா இன்று (அக்.27) வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் ஸ்தலமாகவும் விளங்கக் கூடிய அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலின் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அஷ்ட லிங்கங்களில் ஒன்றாக விளங்கக் கூடிய வருண லிங்கம் திருக்கோயிலில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அஷ்ட லிங்கங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுவதற்காக, கடந்த மூன்று மாதமாக திருப்பணிகள் நடைபெற்றது. திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், அருணாசலேஸ்வரர் திருக்கோயிலின் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், சூரிய லிங்கம், சந்திர லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகிய அஷ்ட லிங்கங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தில், வருண லிங்கம் திருக்கோயிலில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மூன்று கால யாகம் நடைபெற்று, பூர்ணாஹுதி செய்து லிங்கத்திற்கு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.