அண்ணாமலையார் கோயில் தெப்பத்திருவிழா..ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்! - theppa thiruvizha
🎬 Watch Now: Feature Video
Published : Nov 29, 2023, 9:48 AM IST
திருவண்ணமலை: உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக உள்ள திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி. கடந்த 10 நாட்களும் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மேலும் கடந்த 26ம் தேதி மாலை 6 மணியளவில் 2668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபம் ஏற்றபட்டது. இதனை தொடந்து நேற்று முன்தினம் இரவு தீபத்திருவிழாவின் ஒரு பகுதியாக தெப்பல் உற்சவ விழா தொடங்கியது.
நேற்று(நவ.28) காலை கிரிவலத்தின் மகிமையை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் அண்ணாமலையார் கிரிவலம் வந்தார். இதனை தொடந்து திருவண்ணாமலை ஐய்யங்குள ஹக்கராக தெருவில் உள்ள ஐய்யங்குளத்தில் ஸ்ரீ பராசக்தியம்மன் தெப்பலில் எழுந்தருளினார்.
இதனை தொடர்ந்து தீபாராதனைகள் நடைபெற்ற பின்னர் பராசக்தியம்மன் தெப்பலில் மூன்று முறை ஐய்யங்குளத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். மேலும் இன்று இரவு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.