திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ஆவணி திருவிழா - Arulmiku Subramania Swami Temple
🎬 Watch Now: Feature Video
திருச்செந்தூர் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ஆவணி திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. 7-வது திருவிழாவான சிவப்பு சாத்தி நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும் 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. இதனையடுத்து சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்பாளுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST