சீர்வரிசைகளோடு கோலாகலமாக நடந்த ஏழை பெண்ணின் திருமணம்; சிறப்பித்த கோயில் பக்தர்கள்! - etvbharat tamil

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 24, 2023, 3:20 PM IST

தென்காசி: கடையத்தில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது, தோரணமலை ஸ்ரீ முருகன் கோயில், சித்தர்கள் வழிப்பட்ட பல்வேறு சிறப்புடைய இந்த திருக்கோயிலில் ஆன்மிகப் பணிகள் மட்டுமின்றி பல்வேறு சமூக சேவைப் பணிகளும் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் முத்துமாலையப்புரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கணவனை இழந்து மூன்று பெண் குழந்தைகள், ஒரு மகனோடு மிக வறுமை நிலையில் வாழ்ந்து வருபவர், தெய்வக்கனி என்ற பெண். இவர் தோரணமலை முருகன் கோயிலில் தன்னுடைய குழந்தைக்கு திருமணம் நடத்த வேண்டும் என்ற வேண்டுதலோடு வந்தபோது, அதை தெரிந்து கொண்ட தோரணமலை பக்தர்களும், கோயில் நிர்வாகமும் இணைந்து தெய்வக்கனியின் முதல் மகள் ராஜசுபாவின் திருமணச் செலவையும், சீர் வரிசைகளும் திருமணத்தன்று காலை மற்றும் மதிய விருந்துக்கான ஏற்பாடுகளையும் செய்வதென முடிவு செய்தனர். 

பின்னர் அந்த ஏழைப்பெண்ணுக்கு இதுகுறித்து வாக்குறுதியும் அளித்துள்ளனர். இந்த நிலையில் இன்று ராஜசுபாவிற்கும் சரவணகுமார் என்பவருக்கும் தோரணமலை முருகன் கோயிலில் வைத்து திருமணம் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் மேளதாளம் முழங்க சீர் வரிசைகள் வழங்கப்பட்டு சிறப்பாக திருமணம் நடைபெற்றது. 

கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியோடு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்தை நடத்த உதவி செய்த தோரணமலை ஸ்ரீ முருகன் கோயில் பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகி பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் ஆகியோரை பொதுமக்களும், பக்தர்களும் நெகிழ்ச்சியோடு பாராட்டினர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.