ட்ரோன் கேமரா மூலம் கள்ளச்சாராய வேட்டை!!
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரையில் 20 பேர் இறந்த சம்பவமும் தஞ்சாவூரில் 2 பேர் மது குடித்து இறந்த சம்பவம் திழ்நாடு அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றியுள்ள மலைகளில் மற்றும் கிராமங்களில் போலீசார் அதிரடி சோதனையில் இதுவரையில் 30க்கும் மேற்பட்டோரை கள்ளச்சாராயம் காய்ச்சியதாக கைது செய்த சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள் குழுக்களாக தனிப்படை அமைத்து பூசிமலைக்குப்பம், காப்புகாடு, அத்திமலைபட்டு, காரமலை, கண்ணமங்கலம், நாமகாரமலை, சந்தவாசல், படவேடு உள்ளிட்ட பகுதிகளில் 5 தனிப்படை தனித்தனி குழுக்களாக தீவிர தேடுதல் வேட்டையில்
ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மலைப்பகுதிகளில் உள்ள புதர்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி வருகின்றார்களா எனவும் டிரோன் கேமரா மூலம் ஜல்லடை போட்டு சாராய வியாபாரிகளை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ள சாராய விற்பனையை தடுக்க தவறிய எஸ்ஐ உட்பட ஐந்து போலீசார் தற்காலிக பணியிடை நீக்கம்!