அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி மாத உண்டியல் காணிக்கையாக ரூ.98 லட்சம் வசூல்! - Annamalaiyar temple bill offering collects
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01-10-2023/640-480-19652268-thumbnail-16x9-tvm.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Oct 1, 2023, 11:11 AM IST
திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இவ்வாறு வருகிற பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோயில் பகுதியில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
அண்ணாமலையார் கோயிலில் பௌர்ணமி கிரிவலம், சித்ரா பௌர்ணமி மற்றும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்நிலையில், புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலம் முடிந்து நிலையில், நேற்று (செப்.30) அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணிகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில் ரொக்கமாக 98 லட்சத்து 59 ஆயிரத்து 822 ரூபாய் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், தங்கம் 135 கிராம், வெள்ளி 1 கிலோ 75 கிராம் ஆகியவற்றை பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.