திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி - 27 நாள்கள் வரவு எவ்வளவு? - Murugan Temple bill offering counting work
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-17698457-thumbnail-4x3-muruganbill.jpg)
திருவள்ளூர்: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5-ம் படை திருக்கோயிலாகும். இந்த கோயிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மற்றும் ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம், கேரளா, பாண்டிச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருகிறார்கள். அப்படி மலைக்கு வரும் பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் பணம், நகை ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
தற்போது அந்த காணிக்கையை எண்ணுவதற்கு தமிழக இந்து அறநிலைத் துறை ஆணையரிடம் அனுமதி பெற்று,
திருத்தணி முருகன் கோயில் துணை ஆணையர் / செயல் அலுவலர் ப.விஜயா அவர்கள் முன்னிலையில், மலைக் கோயிலில் வசந்த மண்டபத்தில் திருக்கோயில் பணியாளர்கள் & மற்றும் தன்னார்வலர்கள் மூலமாக உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டு, உண்டியல் காணிக்கை விவரங்களை திருத்தணி திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளனர். அதன் விவரம், ரூ.90,76,417 ரொக்கமாகவும், 528 கிராம் தங்கம், 5,382 கிராம் வெள்ளி என பக்தர்கள் 27 நாட்களில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என முருகன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.