Panguni Uthiram: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்! - திருக்கல்யாணம்
🎬 Watch Now: Feature Video

தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றானது இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் இருந்து திருச்செந்தூருக்குத் திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.
கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி அங்க பிரதட்சணம் செய்தும், அழகுவேல் குத்தியும் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு கோயிலில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் மேளதாளம் முழங்க வைதீக முறைப்படி திருக்கல்யாணம் பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவின் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், பந்தல் வசதி, மின்சாரம் போன்ற ஏற்பாடுகளைக் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பாகச் செய்தனர். வெகு விமர்சையாக நடைபெற்ற இந்த திருக்கல்யாணத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.