திம்பம் மலைப்பாதையில் இரவு நேரத்தில் உலவும் சிறுத்தை- ஷாக்கிங் வீடியோ! - Thimbam forest area
🎬 Watch Now: Feature Video
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பாதுகாக்கப்படும் நோக்கில் இரவு நேர போக்குவரத்து தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் இரவு நேரங்களில் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் பண்ணாரி முதல் ஆசனுர் வரை உள்ள வட பாதை போக்குவரத்து நெரிசல் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஓரிரு வாகனங்கள் மட்டுமே திம்பம் மலைப்பாதையில் பயணிப்பதால் யானை சிறுத்தை விலங்கு சாதாரணமாக சாலையில் நடமாடுகின்றன இந்நிலையில் 17ஆவது கொண்டை ஊசி வளைவில் சிறுத்தை ஹாயாக படுத்திருப்பது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST