Kumbakkarai Falls: தேனி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை! - Tourister ban to bath at Kumbakkarai Falls
🎬 Watch Now: Feature Video
தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை நீர்வீழ்ச்சி. கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிளான மேற்கு தொடர்ச்சி மலை, வட்டக்கானல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை காரணமாக தேனி மற்றுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வந்த வண்ணம் உள்ளனர். கடந்த சில தினங்களாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
இதனிடையே, அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கும்பக்கரையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், நீர்வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தேவதானப்பட்டி வனச்சரகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையின் நடவடிக்கைக்கு சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்து உள்ளூர் விடுமுறை.. எதற்கு தெரியுமா?