தேனி சித்தி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம்!
🎬 Watch Now: Feature Video
தேனி: பொம்மை கவுண்டன்பட்டியில் மிகவும் பழமைவாய்ந்த அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார் 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோயிலின் புனரமைப்பு பணிகள் முடிவு பெற்று, கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக யாக சாலையில் யாக குண்டங்கள் அமைத்து, நெய் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
பின்னர் யாக சாலையில் வைத்து புனித கலச நீருக்கு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து வேதாச்சாரியார்கள் கலச நீரை தலையில் சுமந்து கொண்டு விமான கலசத்தை அடைந்தனர். அங்கு விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நிகழ்ந்தது.
பின்னர் கலசங்களுக்கு தீபாராதனை காட்டி, அங்கிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க்கபட்டது. மேலும் கோயிலின் மூலவரான சித்தி விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.