"இவரை பற்றி துப்பு கொடுத்தால் 10 ஆயிரம் ரூபாய் சன்மானம்" - நாயை கண்டுபிடிக்க போஸ்டர் அடித்த உரிமையாளர்! - dog missing poster viral
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: சேரன்மகாதேவி அருகே உள்ள கரிசல்பட்டியைச் சேர்ந்தவர் பெகின் தேவா. இவர் கடந்த சில வருடங்களாக ஒயிட்டன் என்ற பொமரேனியன் ரக நாய் ஒன்றினை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9-ஆம் தேதி அந்த நாய் காணாமல் போய் உள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் தனது நாயை பார்த்தால் தகவல் தெரிவிக்கும்படி அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில், தொலைந்து போன நாய் பற்றி துப்பு கொடுத்தாலோ, கண்டுபிடித்து தந்தாலோ ரூ.10 ஆயிரம் சன்மானம் வழங்குவதாக பெகின் தேவா சேரன்மகாதேவி பகுதிகளில் சுவரொட்டி ஒட்டி வருகிறார். இந்த சுவரொட்டிகள் நாய் பிரியர்களுக்கிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொதுவாக மனிதர்கள் அதுவும் குற்ற வழக்கு கைதிகள் காணாமல் போனால் போலீசார் இதுபோன்று சுவரொட்டி அடித்து சன்மானம் தருகிறோம் என விளம்பரப்படுத்துவார்கள். ஆனால் நெல்லையில் வாயில்லா ஜீவனான நாய் காணமல் போனதற்கு இதுபோன்று விளம்பரப்படுத்தியுள்ள பெகின் தேவாவின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தோள்ளது.
மேலும் காணாமல் போன நாயுடன் அவர் கொஞ்சி விளையாடும் வீடியோவும் வெளியாகியுள்ளது. தனது நாயை பிரிந்த துக்கத்தில் அதை எப்படியாவது கண்டு பிடிக்க வேண்டும் என்பதற்காக பெகின் தேவா இதுபோன்று போஸ்டர் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.