கொடைக்கானலில் நடைபெறவுள்ள மலர்க்கண்காட்சி குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: கொடைக்கானலில் வரும் மே மாதம் 26ஆம் தேதி மலர் கண்காட்சியுடன் கோடை விழா பிரையண்ட் பூங்காவில் நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பூங்காவில் பல்வேறு வகையான பல லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு தற்போது பூத்துக் குலுங்கி வருகின்றன.
இந்த நிலையில் வரும் 26ஆம் தேதி மலர்க் கண்காட்சி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி இன்று பிரையண்ட் பூங்காவை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பூங்காவில் நடைபெறும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மலர்க் கண்காட்சி துவக்க விழாவில் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் பெரியசாமி, சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து முதலமைச்சரின் பதில் என்ன?: கள் இயக்க நல்லுசாமி கேள்வி!