நம்ம ஊர் சூப்பர் திட்டம் - திடீர் ஆய்வுடன் தூய்மைப்பணியில் ஈடுபட்ட திருப்பத்தூர் கலெக்டர் - namma oor super scheme
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: நம்ம ஊர் சூப்பர் திட்டத்தின் கீழ் புதுப்பேட்டை சந்தை மைதானத்தை ஆய்வு செய்து துப்புரவு பணியாளர்களுடன் சந்தையை மாவட்ட ஆட்சியர் தூய்மை செய்தார். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகா, அம்மண கோயில் ஊராட்சிக்குட்பட்ட புதுப்பேட்டை சந்தை மைதானத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வுமேற்கொண்டார்.
அப்போது துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் ஊராட்சிப் பணியாளர்கள் இணைந்து குப்பைகளை அகற்றுவது குறித்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டுகளைத் தவிர்ப்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர் எடுத்துரைத்தார். குப்பைகளை கண்ட இடங்களில் போடக்கூடாது என்றும்; குப்பைகளைத் தரம் பிரித்து குப்பைத் தொட்டியில் தான் போட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் குமார், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் துரை மற்றும் அரசு அதிகாரிகள் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ரூ.350 மெட்டிக்கு ரூ.20 ஆயிரம் செல்போன்.. டிப் டாப் ஆசாமியின் நூதன திருட்டு வீடியோ!