உதவியாளரை செருப்பு தூக்க வைத்த மாவட்ட ஆட்சியர் - வீடியோ வைரல்! - ஸ்ரீமதி
🎬 Watch Now: Feature Video
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. அங்கு வருகின்ற ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி சித்திரை திருவிழா சாகை வார்த்தை நிகழ்ச்சியுடன் தொடங்கி, மே 2-ஆம் தேதி தாலி கட்டுதல் நிகழ்ச்சியும், அதற்கு அடுத்த நாள் மே 3-ஆம் தேதி திரு தேரோட்டமும் நடைபெறுகிறது.
இதனையெட்டி, திருவிழாவிற்கான முன் ஏற்பாடுகள் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், கூவாகம் கூத்தாண்டவர் கோவில் பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக கோவிலுக்கு வருகை தந்தார். அப்பொழுது, கோவில் உள்ளே செல்வதற்கு முன்பு தனது காலணியை கழட்டி தனது உதவியாளரை அழைத்து எடுத்துச் செல்லுமாறு கூறினார். அதனை தொடர்ந்து காலணிகளை அவரது உதவியாளர் எடுத்துச் சென்றார்.
இந்த சம்பவம் பார்த்து ஆய்வுக்காக காத்திருந்த மற்ற அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் இதற்கு முன் கோவை மாநகராட்சியின் ஆணையராக பணிபுரிந்தார். கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்கிற மாணவி உயிரிழந்த சம்பவத்தால் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக, அதற்கு முன்னர் இருந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக மாற்றப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக ஷ்ரவன் குமார் தமிழக முதல்வரால் நேரடியாக பணியில் அமர்த்தபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Online Rummy: ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்: களத்தில் இறங்கிய தமிழ்நாடு போலீஸ்!