தமிழ்ப் புத்தாண்டு: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்! - திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம்
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று(ஏப்.14) தமிழ்ப் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணி அளவில் விஸ்வரூப தரிசனமும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுமார் 8 மணி அளவில் கோயிலில் இருந்து மேள தாளம் முழங்கிட அஸ்திரத்தேவர் கடலில் புனித நீராடிய பின்னர், கோயில் வளாகத்தில் பால், மஞ்சள் போன்ற 16 வகையான பொருட்களைக் கொண்டு அஸ்திர தேவருக்கு வழிபாடு செய்யப்பட்டது.
அதனையடுத்து காலை 10 மணிக்கு மேல் மூலவர் ஷண்முகருக்கு சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிகாலை முதலே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ்ப் புத்தாண்டு அன்று புதிய தொழில், கல்வி, விவசாயம் போன்றவற்றைத் தொடங்கினால் வெற்றி கிடைக்கும் என்று எண்ணி, பல்வேறு தரப்பு மக்களும் ஆர்வமுடன் முருகப்பெருமானை தரிசித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்ப்புத்தாண்டு - அண்ணாமலையார் கோயிலில் தங்கத்தேர் பவனி