Tamil Nadu Day: தருமபுரியில் அதியமான், ஔவை வேடத்தில் அசத்திய பள்ளி மாணவர்கள்! - Avvaiyar Govt Girls Higher Secondary School
🎬 Watch Now: Feature Video

தருமபுரி: தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 'தமிழ்நாடு நாள்' விழா பேரணியை மாவட்ட ஆட்சியர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணி நேதாஜி பைபாஸ் ரோடு வழியாக நான்கு ரோட்டில் உள்ள பெரியார் சிலை வழியாக அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.
அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், பள்ளி வளாகத்தில் வகை வகையான 150-க்கும் மேற்பட்ட மூலிகை தாவரங்கள் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு நாள் தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சு போட்டியில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் காசோலைகளை மாவட்ட ஆட்சியர் சார்ந்தி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் வழங்கினார்.
அதியமான்-ஔவையார் வேடமணிந்து, அதியமான் ஔவையாருக்கு நெல்லிக்கனி தந்த நிகழ்வை தத்ரூபமாக மாணவ, மாணவிகள் நடித்துக் காட்டினர். இந்நிகழ்ச்சியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:Tamil Nadu Day: தஞ்சையில் களைகட்டிய தமிழ்நாடு நாள் விழா!