இரண்டு கைகளும் இல்லாமல் 10ஆம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவர் - முதல்வர் பாராட்டு - கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி
🎬 Watch Now: Feature Video
கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அருகே இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி மாணவன் க்ரித்தி வர்மா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்தார். இந்நிலையில் மாணவன் க்ரித்தி வர்மா தனக்கு இரண்டு கைகளும் இல்லாத நிலையில் தனக்கு செயற்கை கை பொருத்திட அரசு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.
அதனை செய்தியாக பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று மாணவனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மூலம் அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: 'பாண்டியநாடு' பட பாணியில் நடந்த கொலை - மகனின் கொலைக்கு பழி தீர்த்த தந்தை
இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் மாணவன் க்ரித்தி வர்மாவை நேரில் சந்தித்து மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் இன்சூரன்ஸ் கார்டு ஆகியவை வழங்கி செயற்கை கை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.