Video:தஞ்சை பெரிய கோயிலில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் - தஞ்சை மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூரில் உலகப் பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரிய கோயிலில் அமைந்துள்ள நந்தியம்பெருமானுக்கு தை மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு விபூதி, மஞ்சள்பொடி, திரவியப் பொடி, பஞ்சாமிர்தம், இளநீர், கரும்பு சாறு, பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், மங்கள வாத்யங்கள் இசைக்க, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. பக்தர்களால் வழங்கப்பட்ட அருகம்புல், தாமரை, வில்வ இலை மலர்கள் இவற்றை மாலையாக நந்தியம் பெருமானுக்கு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் மழையில் நனைந்தபடி நந்தியம்பெருமானை வழிபட்டனர்.
Last Updated : Feb 6, 2023, 4:07 PM IST