ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து: வீரர் ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம் - காஷ்மீரில் ராணுவ வாகனம் விபத்து
🎬 Watch Now: Feature Video
மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் ராணுவ வாகனம் இன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. மஸ்ஜித் மோட் சும்பல் பால குண்ட் பகுதிக்கு அருகே ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில், அதில் பயணம் செய்த ராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST