தாயை இழந்த அணிலுக்கு பாலூட்டிய சமூக ஆர்வலர்கள்.. வைரலாகும் வீடியோ! - Tirupattur news
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: வாணியம்பாடியில் உள்ள நாடார் காலணியில் இன்று காலை அந்தப் பகுதியில் உள்ள மரத்திலிருந்து அணில் ஒன்று தனது குட்டியுடன் தவறி விழுந்து உள்ளது. கீழே விழுந்த மாத்திரத்தில் தாய் அணில் பரிதாபமாக உயிரிழந்தது. எனவே குட்டி அணில் தாய் இன்றி மரத்தின் அருகே கிடந்து உள்ளது. சிறிது நேரத்தில், குட்டி அணில் பசியுடன் கத்திக்கொண்டு இருந்ததை அப்பகுதியில் உள்ள மக்கள் பார்த்து உள்ளனர்.
பின், சமூக ஆர்வலர்கள் குட்டி அணிலுக்கு முதலுதவி அளித்து உள்ளனர். குட்டி அணில் பசியுடன் இருந்ததை அறிந்த அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் குட்டி அணிலுக்குப் பாலூட்டி உள்ளனர். தற்போது குட்டி அணிலுக்குப் பாலூட்டும் வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. மேலும், இந்த வீடியோ விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று லைக்குகளை அள்ளி வருகிறது.
இதையும் படிங்க: கொடைக்கானலில் 22வது நாய்கள் கண்காட்சி - சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு!!